Please enter a minimum of 2 characters to search.
Please enter a minimum of 2 characters to search.


Memorial Keepers(1)
They manage this memorial. Contact or join
M Poovannan
Sivakumar Manickam
September 22nd, 1969 - October 14th, 2021
September 22nd, 1969 - October 14th, 2021
Create an event page to coordinate a gathering in honor of Sivakumar
Tributes
Share a favorite memory, send condolences, and honor Sivakumar’s life with a heartfelt message.
M Poovannan

M Poovannan
அண்ணனுக்கு அஞ்சலி அன்பு ஆற்றல் இனிமை ஈதல் நேர்மை உண்மை உவகை கருணை எளிமை பொறுமை பணிவு பரோபகாரம் இவையெல்லாப் பண்புகளையும் கொண்டிருந்த என் அண்ணன் இல்லாமல் எப்படி இருக்கப் போகிறோம்!! அப்பாவுக்கு அன்பு மகனாய் சுந்தரிக்கு இனிய கணவனாய் அபி அஸ்வினுக்கு அக்கறையுள்ள அப்பாவாய் விக்கி பிரதீப் சாரல் நாணலுக்கு மாமாவாய் என் உயிர் அண்ணனாய் அக்காவுக்கு அருமை தம்பியாய் உற்றார் உறவினருக்கு உதவிகள் செய்யும் உற்ற தோழனாய் எத்தனை எத்தனை பரிமாணங்கள். ஏன் எங்களை பிரிந்தாய் எங்களை நீங்கா துயருக்குள்ளாக்கி அம்மாவின் மடி சேர்ந்தாயோ!! என் மனம் ஏற்க மறுக்கிறது. எத்தனை பேரின் முயற்சிகள் . எட்டுத் திக்கும் அபிஷேகங்கள் மற்ற மதங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள் ஒரு கணம் நீ சென்னையில் இருப்பதாய் தோன்றுகிறது. மறு கணம் உண்மை உரைக்கிறது. எனக்குத் தெரியும் எங்களைப் பிரிய மனமின்றி எத்தனை அல்லலுடன் எமனுடன் போராடினாய். ஓவ்வொரு முறையும் நம்பிக்கை ஊட்டினாய். சிரித்துப் பேசினாய். வலி தாங்கினாய் அஸ்வினுக்கு அறிவுரை தந்தாய் என்னுடன் அதிகம் உரையாடினாய். பிறகு ஏன் எங்களை விட்டுச் சென்றாய்!! ஓவ்வொரு முறையும் என் அண்ணனைப் போல் சிறந்தவர் எவரும் இல்லையென பெருமிதம் கொள்வேன். எங்கள் ஓவ்வொருவருக்கும் உதவிகள் செய்தாய். வழி காட்டினாய் உறு துணையாய் நின்றாய் உள்ளன்பு காட்டினாய் சிறந்த ஆளுமை கொண்டிருந்தாய் நற்பண்புகளுக்கு இலக்கணமாய் திகழ்ந்தாய். நல்லவருக்கு இவ்வுலகம் இல்லையென்று பூவுலகம் சென்றாயோ !! கடவுள் இருக்கிறாரா தெரியவில்லை எனக்குத் தெரியும் என் அண்ணன் எவ்வுலகம் சென்றாலும் எங்கள் துணை நிற்பாய் . எங்களை வழி நடத்திடுவாய். கண்களில் நீர் மல்க கண்ணீர் அஞ்சலி … அன்பரசி பூவண்ணன் நாள் : 07-11-2021
M Poovannan

Copyright © 2026 Keeper Memorials, All rights reserved.