Dr. Alagappa Rammohan

Memorial Keepers(1)

They manage this memorial. Contact or join

SR

Sonali Rammohan

Dr. Alagappa Rammohan

May 11th, 1939 - December 12th, 2019

May 11th, 1939 - December 12th, 2019

Memorial

Mementos

Dr. Alagappa Rammohan was never afraid of traveling the road less traveled. He came to the United States over 55 years ago and started a life and family with no one paving the way for him. He stands firm in his beliefs and principles no matter the circumstance. He has loved and admired the Tamil language forever. His not for profit organization, his development of the first Tamil school in our area, and his hand book on Tamil heritage and culture with the Thirukkural translation of the famous poet Thiruvalluvar's 1330 Thirukkurral couplets are all continuous reminders of his dedication to leaving a meaningful impact. He has done and continues to do many noteworthy things in his life including starting his own company, traveling the world, getting a PhD in Physics later in life, and now building a library in his hometown. His window to the world is through his love of photography and the art of taking pictures. He truly lived up to Ghandi's words, "Be the change you wish to see in the world."

Tributes

Share a favorite memory, send condolences, and honor Dr.’s life with a heartfelt message.

TC

Thani Kumar Cheran

தமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றின் உயர்வுக்காக பல்வேறு வழிகளில் பணியாற்றிய உயர்திரு அழகப்பா ராம்மோகன் ஐயா அவர்களின் மறைவு தமிழ்கூறும் நல் உலகின் பேரிழப்பாகும். பல அருமையான புத்தகங்கள் வெளியிட்டது மட்டும் அன்றி, பல திருக்குறள்களை உரிய தமிழ்ப்பண்களில் இசைத்தட்டு மூலம் அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராம்மோகன் ஐயா அவர்கள் சிறந்த பண்பாளர்; இனியவர். அவருடைய நட்பு வட்டத்தில் இருந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகின்றேன். அன்னாரின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தணி குமார் சேரன்

Published December 25th, 2019
0
0
IM

Ilango Meyyappan

Written by Nalankilli: தமிழ்த் தொண்டர் அழகப்பா இராம்மோகன் மறைந்தார் நான் 2000இல் ஸ்டீஃபன் ஆக்கிங் எழுதிய A Brief History of Time நூலைத் தமிழில் காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்து முடித்திருந்தேன். அதை வெளியிட பதிப்பகம் கிடைக்கவில்லை. நான் உலகின் தமிழ்ப் பற்றுள்ள சில செல்வந்தவர்களுக்கு இந்தத் தமிழாக்கத்தை வெளியிட்டு உதவ கேட்டிருந்தேன். என்னை மின்ம அஞ்சலில் இராம்மோகன் தொடர்பு கொண்டார். பிறகு தொலைபேசியிலும் பேசினார். இந்த நூலைத் தமிழாக்கம் செய்வது என் நீண்ட நாள் கனவு என்றார். எனக்கும் இது நீண்ட நாள் கனவுதான் என்றேன். பாருங்கள் அதிசியம், உலகின் வெவ்வேறு இடங்களில் உள்ள நம்மை முருகன்தான் சேர்த்து வைத்திருக்கிறார் என்றார். எங்களின் அறிவியல் தமிழ் வேட்கை ஆத்திகரான அவரையும் நாத்திகனான என்னையும் சேர்த்து வைத்தது. அவரது உலகத் தமிழ் அறக்கட்டளை நூலை வெளியிட்டது. அடுத்து ஒரு மூன்றாண்டு கழித்து ஆங்கிலத்தில் இரு தொகுதிகள் கொண்ட மிகப் பெரும் இயற்பியல் புத்தகத்தைக் கொண்டு வந்தார். இதனைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டார். நான் அரண்டு போனேன். ஐயா, இதைப் படித்து முடிப்பதே பெரும் பணி. நான் கொஞ்சம் சோம்பேறி வேறு. இதைப் போய் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்கிறீர்களே என்றேன். இல்லை, உங்களால் முடியும் என்றார். அது அமெரிக்காவின் கால்டெக் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல். புத்தகத்தின் பெயர் The Mechanical Universe. அந்தப் புத்தகத்துக்கு இயந்திர அண்டம் எனப் பெயரிட்டேன். மன உறுதியுடன் ஈராண்டு போராடி தமிழாக்கி முடித்தேன். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் எனப் பாடிய பாரதியின் கனவோடு வாழ்ந்த எங்களின் தமிழ் நட்பு மறக்க முடியாதது. ராம்மோகன் திருக்குறள் உலகெங்கும் பரவ வேண்டும் என்ற பெரும் கனவுடன் வாழ்ந்தார். திருக்குறளை ஆங்கிலேயர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அந்த நூலை பைபிள் தாளில் அச்சடித்து அப்துல் கலாமை சென்னையில் வெளியிடச் செய்தார். தமிழ்த் தொண்டு செய்வதற்கென உலகத் தமிழ் அறக்கட்டளையை அமெரிக்காவில் சிகாகோவில் நடத்தி வந்தார். இத்தகைய அரும் பெரும் தமிழ்த் தொண்டர் இன்று காலை இந்திய நேரப்படி அமெரிக்காவில் சிகாகோவில் காலமானர். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறது. எனக்குள் அறிவியல் தமிழுணர்வைத் தூண்டி விட முக்கியக் காரமாணமாக இருந்த, வாழ்நாள் முழுதும் தமிழ் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த அழகப்பா ராம்மோகன் அவர்களுக்குத் தமிழ் வணக்கங்கள்! - Nalankilli.

Published December 18th, 2019
0
0
MM

Mani Manivannan

Tribute Image
Tribute Image
Published December 16th, 2019
1
0
IM

Ilango Meyyappan

Written by Siva Mayiladuthurai: அமெரிக்காவின் முக்கிய தமிழ் அறிஞர் முனைவர் அழகப்பா ராம் மோகன் மறைந்தார். அமெரிக்கா_தமிழர் வரலாற்றில் முனைவர் அழகப்பா ராம் மோகனுக்கு மிகப் பெரும் இடம் இருக்கிறது. சிகாகோவில் கிட்டதட்ட 50 ஆண்டுகள் வசித்தும், தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுப்பட்டு வந்தார். "உலகத் தமிழ்மொழி அறகட்டளை" மூலம் "தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு - தமிழன எதிர்கால வழிகாட்டி" என்ற திருக்குறள் புத்தகத்தை உலகத் தரத்தோடு வெளியிட்டவர். இந்த தமிழன கையேட்டை வெளியிட உலகம் முழுக்க இருக்கும் தமிழ் ஆர்வலர்களோடு சேர்ந்து பணி ஆற்றியவர். இந்த புத்தகம் வெளிவந்த ஆண்டு 2000, மொத்தம் பிரதிகள் 10,000 - தமிழ் வரலாற்றில் வெளிநாட்டில் வெளியிட்ட தமிழ் இலக்கிய புத்தகம் இத்தனை பிரதிகள் விற்று தீர்ந்த விட்டது என்பது ஒரு மாபெரும் சாதனை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் "நினைக்கப் பட வேண்டியவர்கள்" என்ற மற்றோரு புத்தகத்தையும் தயாரித்து வெளியிட்டவர். இந்த புத்தகம் நம் தமிழுக்கும், நம் தமிழ் சமுதாயத்திற்கு பாடுப்பட்ட பல்வேறு கலைஞர்களை போற்றும் புத்தகம். அகிலன், அறிஞர் அண்ணா, அண்ணாமலை செட்டியார், அழகப்பர் வள்ளல், பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், பாவேந்தர், பாரதி, கலைவாணர், காயிதே மில்லத், ஜீவா, புதுமை பித்தன் என இந்த பட்டியில் மிக நீளம்! சிகாகோ தமிழ்ச் சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, உலகத் தமிழ் அமைப்பு, பன்னாட்டு பெரியார் அமைப்பு என்ற பல அமைப்புகளில் தொடர்ந்து பணி ஆற்றியவர். அமெரிக்காவில் இரண்டு திருமணங்களில் திருக்குறள் முறைப்படி திருமணங்களை நடத்தியவர். கனடாவில் இவரது தமிழன கையேடு மூலம் கனடா_தமிழ்_நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்றுக் கொண்டார். கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அப்படியிருந்தும் அவருடைய சொந்த ஊரில் தமிழ் பண்பாட்டு நூலகம் ஒன்றை ஏற்படுத்துவதில் மீகத்தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இந்த மாதம் இறுதியில் (டிசம்பர் 28) அந்த நூலகத்திறப்பு விழா இருந்தது. இவரது தமிழ் படைப்புகளை "அன்று தொட்டு இன்றுவரை உலகு எங்கும் தமிழ் இனத்தின் மானம் காக்க உயிர்க் கொடை ஈந்த மாவீரர்களுக்கும், சிறை சென்றும் செக்கிழுத்தும் தங்களையே அர்பணித்த உத்தமர்களுக்கும் இப்படைப்பு ஒரு காணிக்கை" - என்று குறிப்பிட்டு இருக்கிறார், இது அவருக்கும் பொறுந்தும். புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்து கோள்-தக்கது உடைத்து. How welcome is the death, which brings Tears to a grateful people! முனைவர் அழகப்பா ராம் மோகனின் தமிழ் பணி காலத்தால் அழியாதவை. அமெரிக்காவில் பெரும் தமிழ் பணி ஆற்றிய அய்யா முனைவர் அழகப்பா ராம் மோகன் இயற்கையில் இளைப்பாறட்டும். மயிலாடுதுறை சிவா வாசிங்டன் திசம்பர் 13, 2019

Published December 18th, 2019
0
0
IM

Ilango Meyyappan

மலர் வணக்கம் - முனைவர் அழகப்பா இராம்மோகன் - Written by So. Sankarapandi. அமெரிக்காவில் தமிழ் மொழி ஆழ விதைக்கப்பட்டதென்றால் அது சிகாகோ மண்ணில்தான். ஒருபுறம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்படவும், ஆராய்ச்சி செய்யவும் சிகாகோ பல்கலைக்கழகம் முன்னோடியாக அமைந்ததன் காரணம் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் ஏ.கே.இராமானுஜம் அவர்கள். மறுபுறம் அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் தமிழ்ச்சங்கங்கள் திரைப்படக் கேளிக்கைகளையும் தாண்டி தமிழ்ப்பண்பாட்டு வேர்களை நிலைநாட்டியதற்கு சிகாகோ தமிழ்ச்சங்கம் முன்னோடியாக அமைந்ததன் காரணம் குறிப்பிட்ட சில தமிழர்கள் (முனைவர் இராம் மோகன், திரு. விசுவநாதன், மருத்துவர் சோம இளங்கோவன், திரு. வா.செ.பாபு. போன்றோர்). அவர்களில் முனைவர் அழகப்பா இராம்மோகன் பதித்த முத்திரை உலக அளவில் அறியப்பட்டதும், பெருமைப்பட்டதுமாகும். அவர் நிறுவிய உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் அறிவார்ந்த பங்களிப்புகள் பல உண்டு. அவையனைத்துமே சிறப்பானவையென்றாலும், முதல் படைப்பான "தமிழ்ப்பண்பாட்டுக்கையேடு" (திருக்குறளை அடிப்படையாகக் கொண்டது) பெருமளவில் உலகத்தமிழர்களிடம் சென்று சேர்ந்ததெனலாம். உலகத்தமிழர் பலரும் பங்களித்த ஒரு நூலென்றும் சொல்லலாம். 1993 ஆம் ஆண்டு விஸ்கான்சின் மாநிலத்தில் நடந்த பேரவை மாநாட்டில்தான் இராம்மோகன் அவர்களை முதன்முதலில் சந்தித்தேன். அதன்பின் நான் 1994ல் இந்தியா சென்று ஒன்றரையாண்டு இருந்துவிட்டு மீண்டும் அமெரிக்காவில் பால்டிமோர் நகருக்குத் திரும்பினேன். 1996ல் தமிழ்ப்பண்பாட்டுக் கையேட்டை கணினியில் அழகுற வடிவமைத்த முனைவர் பெரியண்ணன் குப்புசாமி அவர்களின் வீட்டில் சில வார இறுதிகளில் வந்து தங்கியிருந்தார். அப்பொழுது மெய்ப்புப் பார்ப்பதில் சிறு உதவிகளைச் செய்யும் பொருட்டு நானும் வார இறுதிகளில் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுது தமிழர் வரலாறு மற்றும் அரசியல் தொடர்பாக நிறைய நேரம் உரையாடியதுண்டு. அவருடைய தெளிவான குறிக்கோள்களும், அவற்றை நேர்த்தியுடன் செய்துமுடிக்க அவர் வைத்திருந்த திட்டங்களும் என்னை வியப்பிலாழ்த்தின. அவரிடம் கற்றுக்கொண்ட சில பாடங்கள் உண்டு. அதன்பின் பேரவை மாநாடுகளிலும், பிற தமிழ்-தமிழர் நிகழ்வுகளிலும் சந்தித்து உரையாடியதுண்டு. கடைசியாக இந்த ஆண்டு சிகாகோ மண்ணில் இரண்டு முறை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அப்படியிருந்தும் அவருடைய சொந்த ஊரில் தமிழ்ப் பண்பாட்டு நூலகம் ஒன்றை ஏற்படுத்துவதில் மிகத்தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இந்த மாதம் இறுதியில் (டிசம்பர் 28) அந்த நூலகத்திறப்பு விழா இருந்தது. வாழ்நாள் முழுவதும் எந்தச் சச்சரவுகளிலும் சிக்காமல் நிறைவான பங்களிப்புச் செய்தவர். அமெரிக்கத் தமிழ் இளைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தாரென்று சொல்லலாம்! இராம்மோகன் ஐயா அவர்களுக்கு என் மலர்வணக்கம்! குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!! - So. Sankarapandi.

Published December 18th, 2019
0
0
MM

Mani Manivannan

Tribute Image
Tribute Image
Published December 16th, 2019
0
0
Keeper MemorialsSOC2

Quick Links

About UsHow It WorksFamily TreeFeaturesPricing

Follow Us:

Trustpilot5 star Trustpilot rating

SOC2

Copyright © 2026 Keeper Memorials, All rights reserved.